Thursday, June 23, 2011

கத்தரிக்காய் க்ரேவி அல்லது காரக் குழம்பு ஒரு சமையல் குறிப்பு

ரொம்ப நாளாச்சு..சமையல் பதிவு போட்டு. அதா வந்துட்டேன் கரண்டியும் கடாயுமாக. இப்பெல்லாம் டிவியில் எந்த சானலை, எந்த நேரம் போட்டாலும் யாரவது ஒருத்தர், கரண்டியும் கடாயுமாக வர ஆரம்பிச்சுட்டாங்க.

கத்திரிக்காயில் ஒரு கார கிரேவி அல்லது குழம்பு செய்யப் போறேன். வர்றீங்களா?

தேவையானவை:

பிஞ்சு கத்தரிக்காய் - கால் கிலோ நாலாக வகுந்தது
வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு, பட்டை, சோம்பு
மஞ்சள் பொடி, மிளகாய் பொடி மல்லி, ஜீரகப் பொடிகள், உப்பு அனைத்தும் தேவைக்கேற்ப.
கரைத்த புளித் தண்ணீர் சிறிய கப்
தேங்காய், கசகசா அரைத்த விழுது



கடாயில் எண்ணை ஊற்றி பட்டை சோம்பு தாளித்து வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.


நன்கு வதங்கியதும் வகுந்து வைத்துள்ள கத்தரிக்காயை போட்டு நன்கு பிரட்டி, மூடி போட்டு மூடி வைக்கவும். அதிலுள்ள நீரிலேயே கத்தரிக்காய் நன்கு வெந்ததும் சிறிது நேரம் பிரட்டி கொடுக்கவும். கொஞ்சம் ப்ரை ஆனதும்,


புளித்தண்ணீரை விட்டு கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய், கசகசா விழுதை சேர்த்து தேவையான அளவு கெட்டியானதும்,


பொடியாக அரிந்த கொத்தமல்லி தூவி பரிமாறவும்.


சிறிது வெல்லம் சேர்த்தால் சுவை கூடும்.


சூடான சாதத்தோடு அருமையாயிருக்கும். மேலும் புலாவ், சப்பாத்திகூடவும்
சந்தோஷமாக சொந்தம் கொண்டாடும்.
brinjal நல்ல பிriஞ்சaகவும் காரலில்லாமலும் இருக்கணும்.

7 comments:

S.Menaga said...

பட்டை சோம்பு போட்டுலாம் தாளித்ததில்லை.ரொம்ப நல்லாயிருக்குங்க.கத்திரிக்காயில் எது செய்தாலும் ரொம்ப்ப்ப்ப் பிடிக்கும்.நானும் இன்னிக்கு என் வலைப்பூவில் கத்திரிக்காய் ரெசிபிதான் போட்டிருக்கேன்..

FOOD said...

தமிழ்மணத்தில் இணைத்து ஒரு ஓட்டும் போட்டுட்டேன்.

ராமலக்ஷ்மி said...

அருமையான குறிப்பு. மிக்க நன்றி. செய்து பார்க்கிறேன்.

மாய உலகம் said...

நாளையிலருந்து நான் தான் சமையல் செய்யப்போறேன்.....அதான் உதவிக்கு சமையல் வலைப்பூ திரட்டி இருக்குல்ல
rajeshnedveera

Lakshmi said...

நல்ல குறிப்பு.செய்து பாத்துட்டு
சொல்ரேன். நன்றி.

Lakshmi said...

சுவயான காரக்குழம்பு. நல்லா இருக்கு.
நான் ஏற்கனவே வந்து கமெண்ட்
போட்டேன். அது காணோம்.எஙக்?

MyKitchen Flavors-BonAppetit!. said...

Hi,U have a nice and yumm blog of Tamil recipes here,I'm a food-blogger from TamilNadu.Hope I can learn a lot from U.Following U.Keep posting recipes often.