எழுந்திருக்காதவர்கள் கூட “காபி”யின் மணத்தில்
”டய்ய்ங்” என்று எழுந்து உட்கார்ந்து விடுவார்கள்.
(வகை வகையாய் டீ போடும் எனக்கு காபி
ஒரு சவாலாகவே இருந்தது. அயித்தானோ
மிஸ்டர்.மெட்ராஸ். அவருக்காக காபி
போட கற்றுக்கொண்டேன். இப்ப சூப்பரா
கலக்கறோம்ல)
இன்ஸ்டண்ட் காபியை விட சுவை மணம்
மிக்கது ஃபில்டர் காபி.
பழைய காலத்து டெக்னிக்கில் காபி
போடுவது எனக்கு ரெம்ப கஷ்டம். :)
இந்த ஃபில்டரில் டிகாஷன் எடுப்பது பெரிய
கலை.

நான் பாவிப்பது இதுதான். எனக்கு ரொம்ப ஈசியா
இருக்கு. இந்த மாதிரி ஃபில்டரில் டிகாஷன் சரியா
வராது என்பது பலரின் குற்றச்சாட்டு. அதெல்லாம்
ஒண்ணும் இல்லீங்க சூப்பரா டிகாஷன் வரும்.
பழைய காபி ஃபிலடரில் போடுவது போல் செஞ்சா
போதும். அதாவது பொடியைப் போட்டு முதல் முறைத்
தண்ணீரி விட்டு அது நன்றாக இறங்கியதும் அடுத்த
முறை தண்ணீர் விட்டு எடுத்து இரண்டையும் கலந்தால்
டிகாஷன் ரெடி.
பழைய ஃபிலடரைப் போலவே இதிலும் முதல்
தடவை எடுத்த டிகாஷன் திக்காக இருக்கும்.

டிகாஷன் ரெடி செஞ்சாச்சா. இப்பத்தான் இருக்கு
காபி கலக்கும் கலை.
காபி கலக்க, சர்க்கரை, பால், டிகாஷன் போதும்னு
எல்லோருக்கும் தெரியும். ஆனால் சரி விகித சாரம்,
எதை முதலில் சேர்க்க வேண்டும் இது காபியின்
மணத்திற்கும், சுவைக்கும் மிக முக்கியம்.
முதலில் சர்க்க்கரையை ( 1 ஸ்பூன் போதும்)
போட்டுக் கொள்ளவும்.
பிறகு 1/4 பாகம் டிகாஷன் ஊற்றவும்.
பிறகு பாலைச் சேர்த்து நுரைவர ஆற்றினால்
காபி ரெடி. எல்லோரும் காபி எடுத்துக்கோங்க.


7 comments:
பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கே...:)
காபி சூப்பர் டேஸ்ட்!!! என்ன.. சக்கரைதான் கொஞ்சம் கம்மி!
:)
கலக்கல் :)
காபி சூப்பர் டேஸ்ட்!!! என்ன.. சக்கரைதான் கொஞ்சம் கம்மி!//
காபியோ, டீயோ அதன் கசப்புத் தன்மை நாக்கில் பட்டாத்தான் சுவையே. பானமாதிரி சர்க்கரைப் போட்டா ம்கூஹூம்... நல்லா இருக்காது தமிழன்.
:)
கலக்கல் :)
இப்படியெல்லாம் சிலேடையாக பின்னூட்டம் இடம் உங்களால மட்டும் தான் முடியும் தூயா. நன்றி.
:)))))))))))))))))))))))))
சூப்பர் காபி புதுகைத் தென்றல்!!
எனக்கு இப்படித்தான் இருக்க வேண்டும்
காபி...நுரை பொங்க..பொங்க..உஸ்ஸ்!!
vaanga naanani,
kapi romba sooda irunthirucho!
Post a Comment